29.5 C
Colombo
Friday, August 21, 2026

கிளிநொச்சியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலி

கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியாகியுள்ளது.

கடந்த 15ம் திகதி ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் சிறுவன் படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்காகியுள்ளார்.

குறித்த சிறுவன் உடனடியாக உறவினர்களால் தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொறளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles