30.6 C
Colombo
Tuesday, October 13, 2026

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழில் சைவ பௌத்த அமைப்புக்கள் இரகசிய கலந்துரையாடலில்!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (17) காலை முதல் இந்த கலந்துரையாடல் நடந்து வருகிறது.

இந்த கலந்துரையாடலில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடந்து வருகிறது.

நாளை குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை சைவ அமைப்புக்களால் பொங்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles