பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பகட் பாண் விநியோகிக்க தகுதி பெற்ற தர்ஷன் செல்வராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(14) இடம்பெற்றது.
இதன்போது தர்ஷன் செல்வராஜாவுக்கு பேக்கரி உரிமையாளர் சங்கத்தினரால் பொன்னாடை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களை செய்பவரான தர்ஷன் செல்வராஜா பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் இடத்தைப் பிடித்து அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் அதற்காக அவருக்கு 4000 யூரோக்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் அதிபரின் மாளிகைக்கு ஒரு வருட காலத்திற்கு குறித்த பாணை விநியோகிக்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தர்ஷன் செல்வராஜா ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்று பேக்கரி உற்பத்தியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
காணொளியாக பார்க்க…..https://fb.watch/mrX2iD9zT_/?mibextid=Nif5oz


