32.2 C
Colombo
Friday, October 9, 2026

செஞ்சோலை தாக்குதல் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மீது இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது எம்.கே.சிவாஜிலிங்கத்தால் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles