29.5 C
Colombo
Friday, August 21, 2026

பனை அபிவிருத்தி சபையை பார்வையிட்ட கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக்ஸ் வோல்ஸ் இன்றைய தினம் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்டார்.

மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய பனை சார் உற்பத்தி பொருட்களினையும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆர்வத்துடன் பார்வையிட்டதோடு சில முக்கிய பொருட்களினை தனது கைத்தொலைபேசியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்டுபிடிப்பதற்கான நிதிஉதவிகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், உதவிப் பணிப்பாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles