24.5 C
Colombo
Sunday, October 11, 2026

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு யாழ் நகரில் மரியாதை

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று திங்கட்கிழமை(17) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பூக்கள் தூவப்பட்டது.

ஆடிப்பிறப்பு விசேட உணவுப் பண்டமான ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு அப்பகுதியில் நின்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!” என்ற பாடலை பாடியதன் மூலம் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

எதிர்வரும் காலங்களில் ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும் வகையில் நிகழ்வை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தங்கத் தாத்தா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.சிவஞானராஜா அழைப்பு விடுத்தார்.

காணொளியாக பார்க்க…https://fb.watch/lQzvEnxWPw/?mibextid=RUbZ1f

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles