இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று(14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக இடைமாறி, பிறிதொரு நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இலங்கை ஊடாக ரஜினிகாந்த் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

