29.5 C
Colombo
Friday, August 21, 2026

முன்னாள் ஐனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் கலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிப்பு

யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles