29.5 C
Colombo
Friday, August 21, 2026

அனலைதீவு வைத்தியசாலையில் பொலிஸாருடன் சென்று ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது!

அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொலிஸாருடன் சென்று ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவரொருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனலைதீவு வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டதுடன் தளபாடங்களிற்கு சேதம் விளைவித்தார் என்று சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அனலைதீவு வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்பு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சகிதம் சென்ற வெளிநாட்டு பிரஜையே இவ்வாறு குழப்பம் விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வடமாகாண சுகாதார பணிமனை ஆகியோருக்கு முறறையிடப்பட்ட நிலையில் குறித்த விடயம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆதாரமாக வைத்தியசாலை கண்காணிப்பு கமராவின் காணொளியும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றின் அடிப்படையில் தற்போது வெளிநாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

அவருடன் சென்றார்கள் எனக்கூறப்படும் இரு பொலிஸார் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles