28.9 C
Colombo
Friday, August 21, 2026

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் படுகொலை; மூவர் கைது

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிருசுவில் கரம்பகத்தில் இன்று(31) காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் என்ற 43 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கொடிகாமம் பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்தவரின் இரண்டு பிள்ளைகளும் மற்றொருவருமாக மூவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles