ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமாக மரணித்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை மீள தோண்டி எடுத்து விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் ஊடாக பிரேத பரிசோதனை நடத்துமாறு இன்று (26) சற்றுமுன்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கைதான ரிஷாட் பதியுதீன் எம்பியின் மனைவி, மாமனார், தரகர் மற்றும் இந்த சம்பவம் ஊடாக வெளிப்பட்ட மற்றுமொரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக கைதான ரிஷாட்டின் மைத்துனர் உள்ளிட்ட நால்வரை ஓகஸ்ட் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மகளின் உடலை மீள பரிசோதனை செய்க; நீதி காணும்வரை கண்ணீர் விடேன் – ஹிஷாலினியின் தாய்!

