28.9 C
Colombo
Friday, August 21, 2026

நல்லை ஆதீன குருமுதல்வருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 10 மணியளவில் நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன்,  எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வருகை தந்து  பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று(23) காலை அனலைதீவிலும் மாலை 2 மணிக்கு  சண்டிலிப்பாயிலும் மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும் மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும் மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles