28.9 C
Colombo
Friday, August 21, 2026

சிவப்பு மஞ்சள் கொடி, யாழ். பல்கலைக்கழக கொடி போர்க்கப்பட்டு பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு இறுதி அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் நடைபெற்று, அவரது பூதவுடல், அங்கிருந்து எடுத்துச் வரப்பட்டு மதியம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நூழைவாயில் ஊடாக நூழைந்த பூதவுடல் தாங்கிய வாகனம் விஞ்ஞான பீடத்தின் பகுதிகள் ஊடாக சென்றதுடன் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது வழிநெடுகிலும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள்,நிர்வாகிகள், ஊழியர்கள் என பலரும் கூடி மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.

இதன்போது பூதவுடலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் சிவப்பு மஞ்சள் கொடி போர்க்கப்பட்டதுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தினரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடி போர்க்கப்பட்டது.

தொடர்ந்து, மதியம்  மணியளவில் தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles