28.9 C
Colombo
Saturday, October 10, 2026

ஜனாதிபதியின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கும் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவை ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு விடுத்துள்ளார்.இனிவரும் காலங்களில் தனது  உரைகள் யாவுமே தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்பட வேண்டும் என எமக்கு தெரிவித்தார் – என்றார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டதுடன் தீர்வுகளை அடையவும் இணக்கம் காணப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் மொழிக்கு பொறுப்பான பணிப்பாளர் ஹரேந்திரன் , சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன், மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles