28.9 C
Colombo
Friday, August 21, 2026

பதினொரு மாதங்களேயான பெண் குழந்தை துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை தாயின் சகோதரியின் கணவனால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

வைத்திய பரிசோதனையின் போது , குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனே குழந்தையை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles