28.9 C
Colombo
Friday, August 21, 2026

ஈபிடீபி, சுயேட்சை, சூரியன் ஆதரவுடன் பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடீபி, சுயேட்சை, சூரியன் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த யோ.இருதயராஜா 2022 டிசம்பர் மாதம் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்துக்கே இன்று தெரிவு நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேலுப்பிள்ளை நவரட்ணராஜா போட்டியிட்டார்.

அவரை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி., சமத்துவக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தலா ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 8 பேர் வாக்களித்தனர்.

அதேவேளை, கூட்டமைப்பின் தவிசாளர் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் 6 வாக்குகளையே பெற்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்களும் அவரை ஆதரித்தனர்.

அதன்பிரகாரம் பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நவரட்ணராஜா தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த தேர்தல் உள்ளூராட்சி ஆணையாளர் தலமையில் இடம் பெற்றது.

ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினர் சபைக்கு இன்று சமூகமளிக்கவில்லை.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles