28.9 C
Colombo
Friday, August 21, 2026

கோட்டாவின் இல்லத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சர்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த முயற்சி

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சர்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த  குற்றச்சாட்டின் பேரில், குறித்த சர்ஜன்ட்டுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கடமை நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான கொன்ஸ்டபிளுக்கு  துப்பாக்கியுடன் 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டன. எனினும், அதில் ஒன்றை  காணவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles