25.6 C
Colombo
Wednesday, October 14, 2026

வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு இந்திய மீனவர்கள் டிசம்பர் 28 நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில்  தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்துள்ள இந்திய மீனவர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைக்கு அனுமதி
கோரியநிலையில் நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles