28.9 C
Colombo
Friday, August 21, 2026

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – எட்டுப் பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி – புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று (21) காலை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் இரசாயனம் பரவியுள்ளது.

இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் தினறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய  வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்து  இரசாயனத்தை அற்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வலயத்திற்கும் மாகாண கல்வி பணிமனைக்கும் புஸ்ஸலாவ பொலிசாருக்கும் அறிவித்ததன் பயனாக மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles