29.5 C
Colombo
Friday, August 21, 2026

ரோஹிங்கியர்கள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் (UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டது.

மியன்மாரில் இருந்து வெளியேறப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேஷியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டத்துக்கு புறம்பாக படகு மூலம் பயணித்த போது படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் சனிக்கிழமை(17)  இலங்கை  கடற்படையினரால் மீட்கப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை(18) கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

திங்கட்கிழமை(19) மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன், உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இந்நிலையிலேயே திங்கட்கிழமை(19) இரவு 105 பேரும்   யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகாணவுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles