இலங்கை இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் சனிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்து வருகிறது.

