28.9 C
Colombo
Friday, August 21, 2026

தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா அணி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டி மழைக்காரணமாக தாமதமடைந்தது.இந்நிலையில் இப்போட்டி அணிக்கு 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பமானது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121( 4s*9,6s*1) ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51(4s*5) ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்!

அதனடிப்படையில் 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில் மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 265 என்ற இலக்கு நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

 

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்கஅதிகபட்சமாக 69 பந்துகளில் 77(4s*5,6s*3) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி சமநிலை பெற்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles