29.5 C
Colombo
Friday, August 21, 2026

40 வயதிற்க்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி!

யாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 40 வயதிற்க்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது.

சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்டசுற்றுப்போட்டியில் 15ற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றி போட்டியிட்டிருந்ததுடன் இறுதி போட்டிக்கு கே கேஎஸ் அணியுடன் ஆவரங்கால் மத்தி விளையாட்டு கழகம் பலப்பரிட்சை நடத்தியிருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொடர்ச்சியாக மூன்று சுற்றுக்களிலும் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

அத்துடன் மோகனதாஸ் விளையாட்டு கழக நிர்வாகத்தினர்கள், கழகஉறுப்பினர்கள்,விளையாட்டு வீரர்கள், பிரதேசமக்கள், நலன்விரும்பிகள்,கரப்பந்தாட்ட ரசிகர்கள் என அனைவருனதும் ஒத்துழைப்பில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மேலும் நாளையதினம் சனிக்கிழமை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட அணிகளிற்கான இறுதி போட்டி மாலை ஆறு மணிக்கு மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles