கைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை வடமாகாணச் சம்பியனாகியது.
கைப்பந்தாட்டத்தில் 17 வயதின் கீழ் பெண்கள் அணி, மேசைப்பந்தில் 18 வயதின் கீழ் அணி மற்றும் 16 வயதின் கீழ் மேசைப்பந்து அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கைப்பந்தாட்டத்தில் பயிற்றுவிப்பாளராக தனுஸ்காந் ராஜசோபனா மற்றும் மேசைப்பந்து பயிற்றுவிப்பாளராக சண்முகம் சாமுவேல் கடமையாற்றுகின்றனர்.
யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை கைப்பந்தாட்ட போட்டியில் சாதித்ததுடன் இதுவே முதல் தடவை என்பதுடன் 20 வருடங்களிற்கு பின்னர் மேசைப்பந்து சாதனையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

