29.5 C
Colombo
Friday, August 21, 2026

பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி இன்று (15) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

தலைவர் தனஞ்சய டி சில்வா தலைமையிலான 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

லஹிரு குமார தொடக்க அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 17 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, ஓஷாத பெர்னாண்டோ, லஹிரு உதாரா, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்னாயக்க, அகில தனஞ்ஜெய, மிலன் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, இசித விஜேசுந்தர.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles