யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த புதன்கிழமை (19) மதியம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரும், கௌரவ விருந்தினராக தேசிய கராத்தே தெரிவுக் குழுவின் தலைவர் அன்ரோ டினேஷிம் கலந்துகொண்டனர்.


