யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ருகுணு பல்கலைக்கழகம் இடையிலான துடுப்பாட்டப் போட்டி சகோதரர்களின் போர் 2024 மார்ச் 29, 30ஆம் திகதிகளில் ருகுணு பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
லைக்கா ஞானம் அறக்கட்டளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அனுசரணையில் 40 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் – ருகுணு பல்கலைக்கழகங்கள் இடையே சகோதரர்களின் போர்!
https://t.co/82fmNOnwxo#lka #jaffna @uojofficial @IndiainSL pic.twitter.com/OvCj6dPE1H
— Jaffnagallery News (@JaffnaGallery) March 28, 2024
தொடர்ச்சியாக இரண்டாவது தினத்தில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான நட்பு ரீதியான போட்டியும், பல்கலைக்கழக மாணவிகள் பங்கெடுக்கும் மகளிர் துடுப்பாட்டப் போட்டியும், 20 பந்துப் பரிமாற்றத்தினைக் கொண்ட இரு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்த அணியுடனான போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களிடையே நட்புறவினை ஏற்படுத்துவதன் ஊடாக சமூக நல்லிணக்கத்திற்கான முயற்சிக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவுநர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வழிகாட்டலில் குறித்த துடுப்பாட்ட போட்டிக்கான பிரதான அனுசரணை வழங்கப்படுவதுடன் வெற்றி பெறும் அணிக்கான லைக்கா வெற்றிக்கிண்ணம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் – அல்லிராஜா நிறைவகம் ஊடாக மேற்கொள்ளப்படும் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் செயற்றிட்டம், உருகுணு பல்கலைக்கழகத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

