30.6 C
Colombo
Saturday, October 10, 2026

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று இந்தியாவின் அகமதாபாதில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

சா்வதேச கிரிக்கெட் சபை சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவா்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

கடந்த 2019-இல் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மே.இந்திய தீவுகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா 1 முறையும் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

ஏற்கெனவே 1987, 1996, 2011-இல் வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய நிலையில், 13-ஆவது போட்டியை தன்னந்தனியாக நடத்துகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதா்லாந்து, நியூஸிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இப்போட்டியில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நாக் அவுட் என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

முதல் ஆட்டம் நடைபெறும் அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நவ. 19-இல் இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.

மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, புணே, தா்மசாலா, கொல்கத்தா, லக்னௌ, டில்லி உள்ளிட்ட 10 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பகல் நேர ஆட்டங்கள் காலை 10.30 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கி நடைபெறும். மொத்தம் 6 ஆட்டங்களில் பகலில் நடைபெறுகின்றன. இதர ஆட்டங்கள் பகலிரவு ஆட்டங்களாகும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles