27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி ரத்து; நாளை நடக்கும் என அறிவிப்பு

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

மாலை 7.30 மணியளவில் நாணய சுழற்சி இடம்பெறவிருந்த நிலையில், கனமழை காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.

இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இன்னும் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறி வருகின்றனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles