27.8 C
Colombo
Friday, August 21, 2026

இளையோருக்கான மெய்வல்லுனர் போட்டியில் தமிழ் மாணவிக்கு நடந்த நெகிழ்வான தருணம்

தியகமவில் நடைபெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் இரண்டு பதக்கங்களை வெற்றிகொண்டார்.

18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற அவர் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதன்போது விளையாட்டு தாற்பரியத்தை உணர்த்தும் வகையிலான  நிகழ்வொன்று பதிவானது.

பொலிகண்டி மாணவி பயிற்சிக்கு பயன்படுத்தும் சாதாரண சம்மட்டி கம்பியை பிணைத்து உருவாக்கப்பட்டது.

இதனை கொட்டாவ வடக்கு தர்மபால மகா வித்தியாலய மாணவியான சனுமி தில்தினி பெரேராவும் அவரது பயிற்சியாளரும் அவதானித்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் பொலிகண்டி மாணவியான செல்வகுமார் செவ்வானத்தை நோக்கி வந்த சனுமி தில்தினி பெரேரா உயர்ரக சம்மட்டியை கொடுத்து சிறப்பாக செயற்படுமாறு வாழ்த்தியதாக செவ்வானத்தின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது என்பதுடன் ஏனையோருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles