28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் பிசிஆர் பரிசோதனைக்கான இரசாயனத்துக்கு தட்டுப்பாடு. தேங்கியுள்ள மாதிரிகள்.

 

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் நேற்றுமுதல் தடைப்பட்டுள்ளன.

பிசிஆர் சோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இல்லாமல் அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் இருந்து பிசிஆர் பரிசோதனைக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அதற்குரிய உபகரணங்கள் இயந்திரங்கள் என்பவை கிடைக்கப் பெறுவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டன.

எக்ஸ்ரக்ஸன் ரீஏஜென்ட்ஸ் O எனப்படும் இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்னையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்று நாளைக்கு சமூக மட்டத்திலான பிசிஆர் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக மட்டத்திலான பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளாமல் அவசர தேவை கருதி சில சோதனைகளை மட்டும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாது தேங்கியுள்ளன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles