முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை எனவும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களைத் தகர்த்திருக்கின்றதாகவும் மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இராணுவமும் பொலிஸாரும் அந்த இடத்துக்கு வந்த பின்னர்தான் நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது. போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

