வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (09) பதவிப்பிரமாணம் செய்தார்.
இவர் கடற்படைத் தளபதியாக விளங்கியதுடன்,ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரேவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

