28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்ப்பாணத்துக்கு வந்த புத்தாக்க தொழில் பேருந்து!

யுஎஸ் எய்ட் மிஷன் பணிப்பாளர் றீட் அஸ்லிமனினால்,தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் புத்தாக்க தொழில் பேருந்து ஒன்றிற்கான சாவி கையளித்து வைக்கப்பட்டது.

நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட தொழில் பயிற்சி அதிகாரசபையின் தொழில் பேருந்தானது, உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை,தொழில் சோதனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக இலங்கையின் தென் முனையில் உள்ள தேவேந்திர முனை முதல் வடக்கில் பருத்தித்துறை வரை ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.

புத்தாக்க தொழில் பேருந்து இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்தடைந்திருந்த நிலையில், வைபவ ரீதியாக இன்று காலை 11 மணி அளவில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த பேருந்து கையளிக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles