29.5 C
Colombo
Friday, August 21, 2026

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாவட்டங்களுக்குள்ளும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து மாகாணங்களிலும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி நேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ரயில் சேவைகள் நாளை மாகாணங்களுக்குள் மட்டுமே செயல்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles