24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

அதிக மழைவீழ்ச்சியால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு.

யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் இன்று(9) காலை அறிவித்துள்ளார்.

இன்றைய வகுப்புக்கள் பிறிதொரு நாளில் நடைபெறும் என்றும் அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதேசங்களின் வெள்ள நிலவரங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 9 மணியளவில் இணையவழி ஊடாக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles