29.5 C
Colombo
Friday, August 21, 2026

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(25) முதல் ஆரம்பமாகவுள்ளன.

கொவிட் தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை. இதனால், பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது,

அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று

9,100க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இன்று தாம் சேவைக்கு சமூகமளிக்க இருப்பதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று முதல் தமது ´கற்பித்தல் செயற்பாடுகள்´ முறையாக இடம்பெறும் என ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles