28.9 C
Colombo
Friday, August 21, 2026

2022 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்!

2022 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தபோது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles