பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையேயான சிறப்பு சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தேவையில்லாமல் அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

