யாழ்ப்பாணம் – நீராவியடி, இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்துக்குள் உட்புகுந்து, பொருட்களை திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொம்மைவெளியை சேர்ந்த இருவரை புலனாய்வு பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரிடமும் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டதன் பின்னர் நீதவானிடம் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மண்டபத்தில், பித்தளை பெரிய குத்துவிளக்கு 1, பித்தளை சிறிய விளக்கு 11, அம்பிலிபயர் 1,
சில்வர் பொருட்கள் மற்றும்
கதிரைகள் 25 களவாடப்பட்டு பொம்மைவெளியிலுள்ள இரும்பு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விற்பனை செய்யப்பட்ட குறித்த பொருட்களை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

