*இரண்டாம் இணைப்பு.
கைது செய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர சபை மேயர் எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
*முதலாம் இணைப்பு
அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தாக்குதல் சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (14) இரவு பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவென்யூவில் உள்ள ஒரு இடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர் பம்பலப்பிட்டி பொலிஸில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த நிலையில் அம்பாந்தோட்டை மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

