28.9 C
Colombo
Friday, August 21, 2026

கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

கொடிகாமத்தில் இராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி, சந்தை கடைத்தொகுதி மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் இராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும், மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் இராணுவத்தின் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியின் நெறிப்படுத்தலில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று காலை கொடிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles