யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கத்தினால் பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.
1996 செப்டம்பர் 7ஆம் திகதி யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

