யாழ் – வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நீருயிர்வள தொழில்நுட்ப பாடம் கற்கும் தரம் 11 மாணவர்களுக்கிடையே கடல்புல் தொடர்பான விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் வலிகாமம் கல்வி வலயத்தின்த்தின் மாநாட்டு மண்டபத்தில் தொழில்நுட்ப பாட உதவிக் கல்வி பணிப்பாளர் நளாயினி வசந்தன் தலைமையில் இடம்பெற்றது.
விழாவில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் ஜமுனா ராஜசீலனும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ. சஞ்சீவனும் கலந்து கொண்டனர்.
இத்துடன் இவ்விழாவில் Clean Ocean Force இன் மாவட்ட பிரதிநிதி ம.சசிகரன் மற்றும் வலயத்தின் விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் வெற்றி மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இதற்கான அனுசரணையை Clean Ocean Force எனும் அமைப்பு வழங்கியிருந்தது.

