28.9 C
Colombo
Friday, August 21, 2026

பெண்ணின் பையை திருடியவர்கள் தனிமை சட்டத்தில் கைது!

காதலியின் கைப்பையை திருடிச்சென்ற காதலனும் அவரது நண்பர்கள் இருவரும் காலி – உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரியும் சுதுவெலிபொத பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்னொருவர் ஒரு மாதத்துக்கு முன்பு உடுகம உக்ஓவிட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆட்டோ சாரதியுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

எனினும் இருவருக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட சில நாளுக்குள்ளேயே காதல் முறிவடைந்துள்ளது. இதனால் காதலியின் மேல் கோபத்திலிருந்த காதலன் அவர் வேலைக்குச் செல்லும்போது ஆட்டோவில் சென்று கடத்த முயற்சி செய்துள்ளார்.

எனினும் கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் காதலியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதேவேளை கைப்பையுடன் தப்பியோடியவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியக் குற்றச்சாட்டின் கீழ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles