நேற்று முன் தினம் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையைில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞருக்கு இன்று (24) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய நாள் பரிசோதனை இடம்பெற்றிருந்த நிலையில் தொற்று இரண்டு முடிவுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் காணப்பட்டதால் மீண்டும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டு குடும்பத்தாருக்கு சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய நாள் ஏன் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து இளைஞரின் உறவினர்கள் வைத்தியசாலைக்குள் நுழைந்து நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

