கிளிநொச்சி – மலையாளபுரத்தில் நேற்று (18) இரவு வீடு ஒன்றினுள் புகுந்த இளைஞர் குழுவொன்று நடத்திய தாக்குதலில் பல இலட்சம் பெறுமதியான வீட்டு உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரின் வீட்டுக்குள் நுழைவாயில் கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வீட்டின் கதவினையும் உடைத்து உள் நுழைந்து நடத்திய தாக்குதலில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தளபாடங்கள், வீட்டின் ஜன்னல்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடித்து நொருக்கியுள்ளனர்.
பந்தல் விவகாரம் ஒன்றினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

