வடமராட்சி – பருத்தித்துறை 1-ம் கட்டை சந்தி (சித்தப்பா பூங்கா) பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் சிக்கி பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பருத்தித்துறை நகர் பக்கமாக இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த பெண் தம்பசிட்டி வீதியில் திரும்ப முற்பட்ட போது பருத்தித்துறை நோக்கி வந்த வான் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.

