30.6 C
Colombo
Saturday, October 10, 2026

Apax Campus இன் பட்டமளிப்பு விழா – 2024

Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர் மீரா சாஹிப் ஜெஸ்லின் ரிசாட் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மாலைதீவு, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், உள்நாட்டு அமைச்சர்கள், பேராசிரியர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள், என பல்வேறு உயிர்மட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வின் போது கல்வி, முகாமைத்துவம், கலை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டமளித்து கௌரவிக்கப்பட உள்ளனர்.

Apax Campus நிறுவனமானது 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனமானது இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணவு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு பல்வேறு கற்கைநெறிகளை தொலைதூர கற்கை மூலம் வெற்றிகரமான முறையில் நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் IIC University of Technology , Azteca University மற்றும் Gideon Robert University போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சான்றிதழ் கற்கைநெறி முதல் கலாநிதி கற்கைநெறி வரையிலான பல்வேறு துறை சார் கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது.

மேலும் இந்நிறுவனமானது அர்ப்பணிப்பு உள்ளதும், தகைமையும் அனுபவமும் உள்ள சிறந்ததொரு விரிவுரையாளர் குழுவொன்றினை கொண்டுள்ளதுடன், சிறப்பான முகாமைத்துவக் கட்டமைப்பினையும் கொண்டிருப்பதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஈர்த்துள்ளது. Apax Campus நிறுவனத்தின் கற்கைநெறிகளுக்கான கட்டணமானது நியாயமானதும், இலகு தவணை அடிப்படையிலான கட்டண முறையையும் கொண்டுள்ளமையினால் அதிகமான மாணவர்கள் இணைந்து பல்வேறு பாடநெறிகளைப் பயில்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles