31.7 C
Colombo
Sunday, October 11, 2026

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் கால்கோள் விழாவும் பிரியாவிடையும் !

யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் புதுமுக மாணவர்களுக்கான கால்கோள் விழாவும் பழைய மாணவர்களுக்கான பிரியாவிடையும் இன்று  மாலை 3 மணியளவில் கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுவின் தலைவர் வடிவேலு கோகுல் நேசன் தலைமையில்  இடம்பெற்றது.

காணொளியாக பார்க்க….

https://fb.watch/qhMyQL9ik1/?mibextid=RtaFA8

இதன்பொழுது புதிய கல்வியாண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பரிசில்கள் வழங்கி வரவேற்கபட்டதோடு பழைய மாணவர்களும் கௌரவகக்கபட்டனர் .இதேவேளை ஐந்து வயது மாணவர்களுக்கு ஆத்தி சூடி போட்டியும் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் கலைமகள் கலைமகள் சனசமூக நிலையத்தினர் ,கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுவினர்,சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிகழ்வின் நடுவர்களாக சமாதான நீதிவான் கௌதமன் , நில அளவையாளர் கஜலன்   என பலரும் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles